ரவிச்சந்திரனின் எண்-எழுத்து தோற்றவியல் கோட்பாடு எஸ். ரவிச்சந்திரன்
இவ்வாய்வு தமிழ் எழுத்து அமைப்பை எண்-அடிப்படையில் மறுவடிவமைக்கும் ஒரு புதிய Scriptological மற்றும் Mathematical மாதிரியை முன்வைக்கிறது. உயிரெழுத்துகள் எண் மதிப்புகளாகவும், மெய்யெழுத்துகள் அடிப்படை வடிவங்களாகவும் கருதப்பட்டு, உயிர்மெய் எழுத்துக்கள் கணிதப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இம்மாதிரி மூலம் 247 தமிழ் எழுத்துக்களையும் ஒரு ஒருங்கிணைந்த எண்-அல்காரிதம் அமைப்புக்குள் விளக்க முடிகிறது. மேலும், இக்கோட்பாடு மொழியியல் மற்றும் கணிதத்தின் சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புதுமையான அணுகுமுறையாகும். இது டிஜிட்டல் செயலாக்கம், கணினி மொழியியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் Unicode Encoding துறைகளில் பயன்படும் திறன் கொண்டது. தமிழ் எழுத்து அமைப்பை உலகளாவிய கணித-மொழியியல் தரநிலைக்கு கொண்டு செல்லும் அடிப்படை மாதிரியாக இக்கோட்பாடு அமைகிறது